Ilango Bharathy / 2022 மே 18 , பி.ப. 04:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒலியின் வேகத்தை விட 5 மடங்கு அதிக வேகத்தில் செல்லும் ஹைப்பர்சோனிக் ஏவுகணையை வெற்றிகரமாக பரிசோதித்துள்ளதாக அமெரிக்க விமானப்படை அறிவித்துள்ளது.
அண்மையில் தெற்கு கலிபோர்னியா கடற்பகுதியில், பி-52 பாம்பர் ரக விமானத்தில் இருந்து குறித்த ஏவுகணை சோதிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விமானத்திலிருந்து அதனை ஏவியதைத் தொடர்ந்து, திட்டமிட்டபடி அதன் பூஸ்டர் இயங்கி, ஒலியை விட ஐந்து மடங்கு அதிகமான வேகத்தில் பாய்ந்து சென்றதாக விமானப்படை குறிப்பிட்டுள்ளது.
தாங்கள் மட்டுமே ஹைப்பர் சோனிக் ஆயுதங்களை உருவாக்குவதில்லை என கூறிய அமெரிக்க இராணுவ அதிகாரிகள், ரஷ்யா அந்த ஆயுதத்தை உக்ரேனில் பயன்படுத்தியதாகவும், சீனாவும் அதனை பரிசோதித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
1 hours ago
1 hours ago