S.Renuka / 2026 பெப்ரவரி 17 , மு.ப. 10:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
மடகாஸ்கரில் ஏற்பட்ட கெசானி புயலால் 59 பேர் உயிரிழந்துள்ளதுடன், சுமார் 25,000 வீடுகள் சேதமடைந்து 16,000 பேர் இடம்பெயர்ந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்திய பெருங்கடலில் சில நாட்களுக்கு முன்பு புயல் உருவானது. இந்த புயலுக்கு கெசானி என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
கெசானி புயலானது கிழக்கு ஆபிரிக்காவில் உள்ள மடகாஸ்கரை தாக்கியுள்ளது.

அங்குள்ள அட்சினானா மாகாணத்தில் உள்ள தமரினா நகர் பகுதியில் கரை கடந்தது. அப்போது பலத்த மழை, சூறாவளிக்காற்று வீசியது. இதனால் பல பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. புயலுக்கு தாக்குபிடிக்க முடியாமல் பல கட்டடங்கள் இடிந்து விழுந்துள்ளன.
மேலும், பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டு உள்ளது. கனமழை, வெள்ளத்திற்கு மொத்தம் 59 பேர் உயிரிழந்துள்ளனர். 25,000 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. 27,000 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

தோமசினா பகுதி முற்றிலும் உருக்குலைந்துள்ளது. எங்கு பார்த்தாலும் சேறும், சகதியாகவும், இடிந்த கட்டடங்களுடன் காணப்படுகிறது.
5 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago