2025 மே 17, சனிக்கிழமை

கடன் உதவி வழங்க உலக வங்கி மறுப்பு

Ilango Bharathy   / 2023 ஜனவரி 20 , மு.ப. 09:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 கடந்த சில ஆண்டுகளாகப்  பாகிஸ்தான் அரசானது  கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது.

குறிப்பாக அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கம் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வடைந்துள்ளதால் அந்நாட்டு மக்கள் அன்றாட வாழ்வில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொண்டு வருகின்றனர்.

 இந்நிலையில் பொருளாதார நெருக்கடியில்  தள்ளாடும் பாகிஸ்தானுக்கு கடனுதவி வழங்கும் திட்டத்தை  உலக வங்கியானது  ஒத்தி வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆரம்பத்தில் சுமார் ஒருபில்லியன் டொலர்கள்  கடன்தொகையை வழங்க முன்வந்த உலக வங்கி, பாகிஸ்தானின் இடம்பெற்று வரும்  தீவிரவாத செயல்பாடுகளால்  அதனை நிறுத்தி வைத்திருப்பதாகத்  தகவல் வெளியாகியுள்ளது.

 இதனிடையே தனது பொருளாதார நிலையில் இருந்து மீள்வதற்காக இந்தியாவுடன் மீண்டும் வர்த்தக உறவுகளை மேம்படுத்த பாகிஸ்தான் அழைப்புவிடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .