Editorial / 2026 ஜனவரி 25 , மு.ப. 11:24 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஈரான் மீதான ராணுவ அழுத்தத்தை உச்சகட்டத்திற்குக் கொண்டு செல்லும் வகையில், அமெரிக்காவின் பிரம்மாண்டமான ‘ஆர்மடா’ (Armada) போர்க்கப்பல் படை பாரசீக வளைகுடாவை நோக்கி விரைவதாக ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அதிரடியாக அறிவித்துள்ளார்.
சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடைபெற்ற உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தை முடித்துவிட்டு, ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் நாடு திரும்பும் வழியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “நாங்கள் ஈரானை மிக நெருக்கமாகக் கண்காணித்து வருகிறோம். எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகவே ஒரு மிகப்பெரிய போர்க்கப்பல் படை அந்தத் திசையில் சென்றுகொண்டிருக்கிறது.
எதையும் செய்யக்கூடாது என்பதுதான் எனது விருப்பம், ஆனால் ஈரானின் நடவடிக்கைகள் எங்களைக் கடும் முடிவெடுக்கத் தூண்டுகின்றன,” என்று எச்சரிக்கை விடுத்துள்ளார். தென் சீனக் கடலில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் விமானம் தாங்கிக் கப்பல் மற்றும் அதன் போர்க்கப்பல் குழுக்கள் தற்போது ஈரானை நோக்கித் திருப்பப்பட்டுள்ளது மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரும் போர்ப் பதற்றத்தை உருவாக்கியுள்ளது.
ஈரானில் சமீபத்தில் வெடித்த அரசு எதிர்ப்புப் போராட்டங்களில் சுமார் 3,117 பேர் கொல்லப்பட்டதாக அந்நாட்டு அரசு அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. இருப்பினும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15,000-ஐத் தாண்டியிருக்கலாம் என மனித உரிமை அமைப்புகள் அச்சம் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில், அமெரிக்காவின் ராணுவ மிரட்டல் காரணமாகவே, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு விதிக்கப்பட்டிருந்த 837 தூக்கு தண்டனைகளை ஈரான் அரசு நிறுத்தி வைத்துள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.
கடந்த ஜூன் மாதம் இஸ்ரேலுடன் இணைந்து ஈரான் மீது நடத்திய 12 நாள் தாக்குதலுக்குப் பிறகு, தற்போது மீண்டும் ஒரு நேரடி ராணுவ நடவடிக்கைக்கு அமெரிக்கா தயாராகி வருவதால் அரேபிய கடல் பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. குறிப்பாக, அமெரிக்காவின் யு.எஸ்.எஸ் ஆபிரகாம் லிங்கன் கப்பல் தனது தானியங்கி அடையாளச் சிக்னலை (AIS) நிறுத்திவிட்டு ரகசியமாகப் பயணிப்பது, ஈரான் மீதான மின்னல் வேகத் தாக்குதலுக்கான அறிகுறியோ என்ற விவாதத்தை சர்வதேச அரசியல் அரங்கில் எழுப்பியுள்ளது.
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago
3 hours ago