Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2022 ஓகஸ்ட் 09 , மு.ப. 09:07 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈக்குவடோர் ( Ecuador) நாட்டைச் சேர்ந்தவர் ஐலிஸ் மெலினா ( Ailiz Melina). 26 வயதான இவர், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்,பெட்ரோ பப்லோ (Pedro Pablo) என்ற தனது காதலரைத் திருமணம் செய்து கொண்டார்.
இவர்கள் இருவரும் கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த சமயத்தில், ஒருவருக்கு ஒருவர் காதலித்து வந்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தனது மாமியார் வீட்டில் இருந்த புகைப்பட அல்பம் ஒன்றை தற்செயலாகப் பார்த்த ஐலிஸ் சுமார் 15 வருடங்களுக்கு முன்பு, கணவரின் சிறு வயது புகைப்படம் ஒன்றில், அவரின் பின்னால், தான் நிற்பதைக் கண்டு இன்ப அதிர்ச்சியடைந்துள்ளார்.
ஒரு வீதியில் வைத்து இப் புகைப்படம் எடுக்கப்பட்டுள்ள நிலையில், கெமராவைப் பார்த்த படி, பெட்ரோ நிற்க, அவரை எதேச்சையாக மஞ்சள் நிற உடை அணிந்த ஐலிஸ் பார்ப்பது போன்று அப்புகைப்படம் உள்ளது.
இந்நிலையில் இது குறித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ள ஐலிஸ் நாங்கள் இருவரும் சேர வேண்டும் என்பது எங்களது சிறுவயதிலேயே தீர்மானிக்கப்பட்டிருக்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து குறித்த புகைப்படமானது இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago
3 hours ago