2025 மே 16, வெள்ளிக்கிழமை

கத்திக்குத்து தாக்குதல் பற்றி “புத்தகம் எழுதுவேன்”

Janu   / 2023 ஜூன் 05 , மு.ப. 10:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தியாவில் பிறந்த பிரபல எழுத்தாளர் சல்மான் ருஷ்டி 1988-ம் ஆண்டு எழுதிய தி சாத்தானிக் வெர்சஸ் என்ற புத்தகம் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனால் அவருக்கு கொலை மிரட்டல்கள் விடுக்கப்பட்டன. இதற்கிடையே கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சல்மான் ருஷ்டி மீது வாலிபர் ஒரு கத்தியால் சரமாரியாக குத்தினார். 

 இந்த தாக்குதலில் அவர் ஒரு கண் பார்வையை இழந்தார். இந்த சம்பவத்துக்கு பிறகு முதல் முறையாக சல்மான் ருஷ்டி கடந்த 20 ஆம் திகதி நியூயார்க்கில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்றார். இந்த நிலையில் தன் மீதான கத்திகுத்து தாக்குதல் சம்பவம் பற்றி புத்தகம் எழுத போவதாக சல்மான் ருஷ்டி அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் கூறியதாவது:- என் மீதான தாக்குதல், என்ன நடந்தது மற்றும் அதன் அர்த்தம் என்ன, தாக்குதல் பற்றி மட்டுமின்றி அதை சுற்றியும் நடந்தது பற்றியும் ஒரு புத்தகத்தை எழுத முயற்சிக்கிறேன் என்றார்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .