Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 19, திங்கட்கிழமை
Ilango Bharathy / 2022 ஜூன் 30 , மு.ப. 09:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிரித்தானியாவில் சவுத்தாம்ப்டன் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் ஜெஸ் டேவிஸ்(20) என்ற மாணவி, கடந்த 12 ஆம் திகதி தனது நண்பரின் பிறந்த நாளைக் கொண்டாட அவரது வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இதன் போது அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டதால் இது மாதவிடாய் காண அறிகுறி என நினைத்து அவர் கழிவறைக்குச் சென்றுள்ளார்.
அங்கு அவர் எதிர்பாராத விதமாக ஆண் குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.
இந்நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்த அவர் ” நான் கர்ப்பம் தரித்ததற்கான எந்த அறிகுறியும் எனக்குத் தென்படவில்லை. எனக்கு மாதவிடாய் சுழற்சி எப்போதும் ஒழுங்கற்ற முறையில் இருக்கும். அதனால் தான் உண்மையில் இதனைக் கவனிக்கவில்லை. எனக்கு சில சமயங்களில் குமட்டல் மட்டும் ஏற்பட்டது. நான் புதிய மருந்து சாப்பிட ஆரம்பித்தேன். பிறகு அதையும் நிறுத்திவிட்டேன். என் வாழ்க்கையில் மிகவும் அதிர்ச்சியான சம்பவம் என்றால் அது இதுதான்” இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் மூன்று கிலோ கிராம் எடை கொண்ட அக் குழந்தை இன்குபேட்டரில் தற்போது வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் அக் குழந்தை 35 வாரங்களில் பிறந்துள்ளதாகவும், தாயும் சேயும் தற்போது நலமுடன் உள்ளனர் எனவும் வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 minute ago
12 minute ago
20 minute ago
35 minute ago