2025 மே 09, வெள்ளிக்கிழமை

கோவிலுக்குள் நிர்வாணமாக நுழைந்த பெண்ணால் பரபரப்பு

Ilango Bharathy   / 2023 மே 30 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

 கோவில் ஒன்றுக்குள் ஜேர்மனியைச் சேர்ந்த பெண்ணொருவர் திடீரென  தனது ஆடைகளை கழற்றி  நிர்வாணமாக உள்ளே நுழைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்தோனேசியாவின் பாலி நகரில் உள்ள கோயில் ஒன்றிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. குறித்த பெண் அக்கோவிலில் நிர்வாணமாக நடமாடியதோடு இதற்கு எதிர்ப்புத் தெரிவித்த அக் கோவில் நிர்வாகத்தினர் மீதும் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார் எனக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் இதுகுறித்து கோவில் நிர்வாகத்தினர் பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியதையடுத்து அங்கு வந்த பொலிஸார் அப்  பெண்ணைக் கைது செய்து அழைத்துச் சென்றுள்ளனர். விசாரணையில் அப்பெண்   தங்கியிருந்த விடுதியின் கட்டணத்தைக் கூட செலுத்தவில்லை எனக்  கூறப்படுகிறது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X