2025 மே 19, திங்கட்கிழமை

கவலைப்பட வேண்டாம்; முழுப் பணத்தையும் திருப்பித் தருவோம்

Ilango Bharathy   / 2022 மே 29 , மு.ப. 09:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

பெர்முடா முக்கோணப் பகுதிக்கு, சுற்றுலாப் பயணிகளை  சொகுசுக் கப்பலில் சுற்றுலா அழைத்துச் செல்லும் நிறுவனமொன்று, கப்பல் மாயமாக மறைந்துவிட்டால் முழுப்பணத்தையும் திருப்பித் தருவதாக உறுதியளித்துள்ளது.

நீண்ட காலமாக வட அட்லாண்டிக்கடலின் மேல்பகுதியில் உள்ள வரையறுக்கப்பட்டப் பகுதியான பெர்முடா முக்கோணத்தில் பயணிக்கும் விமானங்களும், கப்பல்களும் மர்மமான முறையில் காணாமற் போவதாகக் கூறப்படுகின்றது.

இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த குறித்த நிறுவனமானது சுற்றுலாப் பயணிகளைக் கவரும் வகையில்  ”கவலைப்படாதீர்கள், இந்த பெர்முடா முக்கோணப் பயணத்தில் எதிர்பாராதவிதமாக மாயமாகி விட்டால் உங்கள் பணம் திருப்பித் தரப்படும்” என்று அறிவித்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X