Freelancer / 2024 ஜூலை 07 , மு.ப. 10:35 - 0 - {{hitsCtrl.values.hits}}

காசா மீதான இஸ்ரேல் தாக்குதலில், கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறியிருக்கும் நிலையில், கொல்லப்பட்டவர்களில் ஐந்து பலஸ்தீன ஊடகவியலாளர்களும் அடங்குவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
காசா மருத்துவமனைகளில் எரிபொருள் நெருக்கடி நிலவி வரும்நிலையில், மருத்துவமனைகளுக்குள் பல துறைகளில் பணிகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதன் காரணமாக சிக்கன நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
ஜூன் 27 அன்று வெளியிடப்பட்ட இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை மற்றும் வெளியேற்ற உத்தரவைத் தொடர்ந்து கிழக்கு காசா நகரத்திலிருந்து சுமார் 80,000 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக மனிதாபிமான விவகாரங்களின் ஒருங்கிணைப்புக்கான ஐ.நா அலுவலகம் (OCHA) தெரிவித்துள்ளது.
இதேசமயம், காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் 29 பேர் கொல்லப்பட்டதாக காசாவின் சுகாதார அமைச்சகம் கூறியிருக்கும் நிலையில், கொல்லப்பட்டவர்களில் ஐந்து பலஸ்தீன ஊடகவியலாளர்களும் அடங்குவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. கொல்லப்பட்ட ஐந்து ஊடகவியலாளர்களின் பெயர்கள் காசா அரசாங்கத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதாவது, கடந்த 48 மணி நேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 87 பேர் கொல்லப்பட்டனர் என்று காசா அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் 7 முதல் காசா மீதான இஸ்ரேலின் போரில் 38,098 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 87,705 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹமாஸ் தலைமையிலான தாக்குதல்களால் இஸ்ரேலில் இறந்தவர்களின் எண்ணிக்கை 1,139 என மதிப்பிடப்பட்டுள்ளதுடன், ஆயிரக்கணக்கான மக்கள் காசாவில் இன்னும் சிறைபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.S
24 minute ago
31 minute ago
35 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
31 minute ago
35 minute ago
42 minute ago