Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 பெப்ரவரி 05 , மு.ப. 10:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
காசா பகுதியை அமெரிக்கா கைப்பற்றிக்கொள்ளும் என்று, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்தார்.
மேலும், கையகப்படுத்தும் காசா பகுதியில் மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான போர் நிறுத்தத்திற்கு பிறகு அமெரிக்காவில், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு சந்தித்து பேசினர். இந்த பேச்சுவார்த்தைக்கு பிறகு ட்ரம்ப் இந்த கருத்தை முன்வைத்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ட்ரம்ப்,
"காசா பகுதியை அமெரிக்கா எடுத்துக் கொண்டு, அங்கு ஒரு வேலையை செய்யவுள்ளது. நாங்கள் அதற்கு உரிமம் கொள்வோம். அங்குள்ள வெடிக்காத வெடிகுண்டுகளை பாதுகாப்பாக அகற்றுவோம். நலப்பரப்பை சீர்ப்படுத்துவோம்.
"இடிந்துபோன கட்டிடங்களை அகற்றுவோம். பொருளாதார வளர்ச்சியை கொண்டுவந்து, எண்ணற்ற வேலைவாய்ப்பை உருவாக்குவோம். அந்தப் பகுதியில் உள்ள மக்களுக்கு வீட்டு வசதியை ஏற்படுத்திக் கொடுப்போம்” என்று கூறினார்.
மேலும், “போரால் பாதிக்கப்பட்ட காசாவில் இருந்து பாலஸ்தீனியர்கள் வெளியேறி எகிப்து அல்லது ஜோர்டான் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல வேண்டும்” என்றும் ட்ரம்ப் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
14 minute ago
37 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
37 minute ago
1 hours ago
2 hours ago