2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

காண்டாமிருக வேட்டை தடுப்பு: டிகாப்ரியோ பாராட்டு

Freelancer   / 2023 பெப்ரவரி 12 , பி.ப. 06:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

காசிரங்கா தேசிய பூங்காவில் காண்டாமிருகத்தை வேட்டையாடுவதைத் தடுப்பதில் அசாம் அரசின் முயற்சிகளை ஹாலிவுட் நடிகர்  லியோனார்டோ டிகாப்ரியோ பாராட்டினார்.

1977 ஆம் ஆண்டுக்குப் பின்னர், முதன்முறையாக அழிந்துவரும் பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்துக்கான உலகின் மிகப்பெரிய காப்பகத்தில் கடந்த ஆண்டு காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படவில்லை என்று ஒரு செய்தி அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளது.

"2000 மற்றும் 2021 க்கு இடையில் அவர்களின் கொம்புகளுக்காக காசிரங்கா தேசிய பூங்காவில் சுமார் 190 காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, அழிந்துவரும் பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை வேட்டையாடுவதை நிறுத்த இந்திய மாநிலமான அஸ்ஸாம் அரசாங்கம் முடிவு செய்தது. 

1977 க்குப் பின்னர் முதல் முறையாக இப்பகுதியில் காண்டாமிருகங்கள் வேட்டையாடப்படவில்லை 2022 இல், அவர்கள் தங்கள் இலக்கை அடைந்தனர்” என்று ஒரு காண்டாமிருகத்தின் படத்தைப் பகிர்ந்து இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார்.

குறிப்பிடத்தக்க வகையில், காசிரங்கா தேசியப் பூங்காவில் 2,200 பெரிய ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்கள் உள்ளதுடன், இது உலக அளில் மூன்றில் இரண்டு பங்கு ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

டிகாப்ரியோவின் பதிவுக்கு ஆயிரக்கணக்கான மக்கள் கருத்துத் தெரிவித்ததோடு, இந்தியாவின் சாதனைக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.  

பிரம்மபுத்திரா ஆற்றின் வெள்ளப்பெருக்கில் அமைந்துள்ள அசாமின் காசிரங்கா தேசியப் பூங்கா உலகளவில் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகங்களின் மிகப்பெரிய வாழ்விடமாகவும், உலகம் முழுவதிலுமிருந்து பார்வையாளர்களை ஈர்க்கிறது. 

2015 மற்றும் 2016 ஆம் ஆண்டுகளில், வேட்டையாடுபவர்களால் கொல்லப்பட்ட காண்டாமிருகங்களின் எண்ணிக்கை முறையே 17 மற்றும் 18 ஆக இருந்தது, இது பின்னர் 2020 மற்றும் 2021 இல் இரண்டாகவும், 2022 இல் பூச்சிமாகவும் குறைந்துள்ளது என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .