2026 மே 14, வியாழக்கிழமை

dd

காந்தியின் அஸ்தியால் சர்ச்சை

Ilango Bharathy   / 2022 ஜனவரி 31 , பி.ப. 05:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

மகாத்மா காந்தியின் அஸ்தி தங்களிடம் இருப்பதாக அமெரிக்காவைச் சேர்ந்த ஆச்சிரமம்  ஒன்று தெரிவித்துள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

1948ம் ஆண்டு காந்தி படுகொலை செய்யப்பட்டதால் இறுதிச் சடங்குகளுக்குப் பின் அவரது அஸ்தி 20க்கும் மேற்பட்ட பகுதிகளாக பிரிக்கப்பட்டு பல்வேறு இடங்களுக்கு கொண்டு செல்லப்பட்டது.

இதில் சில வெளிநாடுகளுக்கும் கொண்டு செல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந் நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் காந்தி உலக அமைதி நினைவுச் சின்னம் உள்ளது.

இதனை 1950ல் பரமஹன்ச யோகானந்தா என்பவர் நிறுவியதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில் குறித்த நினைவுச் சின்னத்தில் காந்தியின் அஸ்தி இருப்பதாகக் கூறப்படுகிறது.

இதனை காந்தியின் வழித்தோன்றல்கள் மறுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .