S.Renuka / 2026 மார்ச் 04 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஈரான் அதியுயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனியை கொலை செய்வதற்கு பல ஆண்டுகளாக இஸ்ரேலின் 'மொசாத்' (Mossad- இஸ்ரேலின் தேசிய புலனாய்வு மற்றும் வெளிநாட்டு உளவு அமைப்பு) உளவு வேலை பார்த்துள்ளதாக அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளில் கூறப்பட்டுள்ளது.
ஈரான் அதியுயர் தலைவர் அயத்துல்லா அலி காமேனி கடந்த 1989ஆம் ஆண்டு முதல் ஆட்சி செய்தார். நாட்டில் அடக்குமுறை, அணு ஆயுத தயாரிப்பு போன்றவற்றை காரணம் காட்டி அவரை அமெரிக்க, இஸ்ரேல் படைகள் கடந்த சனிக்கிழமை குண்டு வீசி கொன்றன.
இந்நிலையில், காமேனியை குறி வைப்பதற்கு முன்பு பல ஆண்டுகளாக இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாத் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தது தற்போது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து அமெரிக்க ஊடகங்கள் வெளியிட்ட செய்தியில் கூறியிருப்பதாவது, அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதலில் காமேனி உயிரிழந்தார். ஆனால், பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இஸ்ரேலின் மொசாத்தும், அமெரிக்காவின் சிஐஏ.வும் பல வேலைகளைப் பார்த்து வந்தன.
குறிப்பாக ஈரான் தலைநகர் டெஹ்ரான் நகரம் முழுவதும் உள்ள போக்குவரத்து கேமராக்கள், மொபைல் போன்களை மொசாத் ஹேக் செய்து கண்காணித்து வந்தது. காமேனியின் பங்களா, அவர் செல்லும் இடங்கள், எத்தனை மணிக்கு அவர் அலுவலகத்துக்கு வருகிறார், எப்போது செல்கிறார்.
அவருடைய பாதுகாவலர்கள் யார் யார், அவர்களுக்கு எத்தனை மணி நேர வேலை, அவர்கள் எந்தெந்த ‘ஷிப்ட்’களில் வந்து செல்கின்றனர், குறிப்பாக காமேனியை அழைத்து செல்பவர்கள் யார், அவர்களுடைய முகவரி, குடும்ப விவரம் அனைத்தையும் மொசாத் சேகரித்து வைத்துள்ளது. டெஹ்ரானின் போக்குவரத்து கேமராக்கள் பெரும்பாலும் மொசாத்தின் கண்காணிப்பில்தான் இருந்துள்ளது.
அப்படி கண்காணித்துதான் டெஹ்ரானின் பஸ்தூர் பகுதியில் ஈரான் மூத்த அதிகாரி வந்தபோது இஸ்ரேல், அமெரிக்கா தாக்குதல் நடத்தி உள்ளது. அங்குதான் காமேனி கொல்லப்பட்டுள்ளார். அந்த தாக்குதலை இஸ்ரேலின் மொசாத் போக்குவரத்து கேமராக்கள் மூலம் நேரடியாக பார்த்துள்ளது.
இப்படி போக்குவரத்து கேமராக்களை ஹேக் செய்து நேரடியாக பல ஆண்டுகள் தீவிரமாக கண்காணித்த பிறகுதான், காமேனி வரும் நேரம், அலுவலகத்துக்கு அவர் வந்தவுடன் அங்கு யார் யாரெல்லாம் வருகின்றனர் என்பதை அறிந்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
கடந்த சனிக்கிழமை மாலை இராணுவ தளபதிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்த திட்டமிட்டிருந்தார் காமேனி. ஆனால், திடீரென காலையில் அந்த கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
இதை எப்படியோ மொசாத் மோப்பம் பிடித்து அமெரிக்காவுக்கு தகவல் கொடுத்தது. அதன்பிறகுதான் போக்குவரத்து கேமராக்கள் மூலம் கண்காணித்து தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
14 minute ago
36 minute ago
52 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
36 minute ago
52 minute ago