Editorial / 2019 ஜூன் 04 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடகொரியத் தலைவர் கிம் ஜொங் உன்னுடன், கலை நிகழ்வொன்றில் அந்நாட்டின் முன்னாள் உயர் அணுப் பிரதானி கிம் யொங் சோல் இருந்ததாக அந்நாட்டின் அரச செய்தி முகவரகமான கே.சி.என்.ஏ, நேற்று (03) தெரிவித்துள்ளது.
அந்தவகையில், முன்னாள் உளவுத்துறை தலைவரான கிம் யொங் சோல் உயிருடனும், அரச கட்டமைப்பில் செல்வாக்குள்ளவராக இருக்கின்றார் என்ற சமிஞ்ஞையை கே.சி.என்.ஏ வெளிப்படுத்தியுள்ளது.
தலைவர் கிம் ஜொங் உன், அவரது மனைவி றி சொல் ஜூ ஆகியோருடன் வடகொரிய இராணுவத்திலுள்ள அதிகாரிகளின் மனைவிகளால் நடாத்தப்பட்ட கலை நிகழ்ச்சியொன்றில் 12 முன்னணி அதிகாரிகளில் கிம் யொங் சோலை 10ஆவதாக கே.சி.என்.ஏ பெயரிட்டிருந்தது.
தலைவர் கிம் யொங் உன்னின் வலதுகரமும், ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடனான இவ்வாண்டு பெப்ரவரியில் நடைபெற்ற தலைவர் கிம் யொங் உன்னின் சந்திப்புக்கு முன்னர் வடகொரியாவின் வெளிநாட்டமைச்சராகவிருந்த கிம் யொங் சோல் தொழில், மீள் கல்வி முகாமுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக அடையாளப்படுத்தப்படாத வடகொரிய தகவல் மூலமொன்றை மேற்கோள்காட்டி தென்கொரிய பத்திரிகையான சோசுன் இல்போ கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தது.
இந்நிலையில், எப்போது இறுதியாக கிம் யொங் சோலுடன், வடகொரியாவுடன் பொதுவாக இறுதியாகத் தொடர்பு கொண்டது தொடர்பில் ஐக்கிய அமெரிக்க இராஜங்கச் செயலாளர் மைக் பொம்பயோவிடம் வினவப்பட்டபோது, அவர் பதிலளிக்க மறுத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
36 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
1 hours ago