Editorial / 2019 ஏப்ரல் 04 , மு.ப. 08:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
தன்னைத்தானே வெனிசுவேலாவின் ஜனாதிபதியாக அறிவித்துக் கொண்ட அந்நாட்டின் தேசிய சபையின் சபாநாயகர் குவான் குவைடோவின் சட்டவிலக்கை நேற்று முன்தினம் நீக்கிய அந்நாட்டின் அரசமைப்புச் சபை, வெனிசுவேலாவின் ஜனாதிபதியாக தன்னைப் பிரகடனப்படுத்தியதற்காக குற்றவியல் விசாரணை மேற்கொள்ள அந்நாட்டின் உச்ச நீதிமன்றத்தை அங்கரித்துள்ளது.
இந்நிலையில், குவான் குவைடோவின் தேசிய சபை சட்டவிலக்கை நீக்குமாறு அரசமைப்புச் சபையை உச்ச நீதிமன்றம் கடந்த திங்கட்கிழமை கோரியதைத் தொடர்ந்து அரசாங்க முகவர்களால் கடத்தப்படும் அச்சத்தை 50 நாடுகளால் அங்கிகரிக்கப்பட்ட குவான் குவைடோ வெளியிட்டிருந்தார்.
இச்சந்தர்ப்பத்தில், குவான் குவைடோவை உச்ச நீதிமன்றம் விசாரணை செய்ய அரசமைப்புச் சபை உறுப்பினர்கள் ஏகமனதாக அங்கிகரித்ததாக அரசமைப்புச் சபையின் தலைவர் டியோஸ்டடோ அறிவித்த்திருந்தநிலையில், நாட்டை விட்டு வெளியேறக் கூறாதென்ற அரசாங்கத்தின் இவ்வாண்டு ஜனவரி 29ஆம் திகதி தடையை மீறியதற்காக குற்றஞ்சாட்டப்படும் வாய்ப்பை குவான் குவைடோ கொண்டிருக்கின்றார்.
தன்னை இடைக்கால ஜனாதிபதியாக இவ்வாண்டு ஜனவரி 23ஆம் திகதி பிரகடனப்படுத்தி வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கொலஸ் மதுரோவின் அதிகாரங்களைப் பறித்ததற்காக குவான் குவைடோவை உச்ச நீதிமன்றம் ஏற்கெனவே விசாரித்து வருகின்றது.
இந்நிலையில், இதற்கான உறுதியான பதிலளிப்பாக மக்கள் உறுதியாக இருப்பதாகவும், எதுவும் தங்களை நிறுத்தப் போவதில்லை என குவான் குவைடோ கூறியுள்ளார். உச்ச நீதிமன்றத்தையோ அல்லது அரசமைப்புச் சபையையோ அங்கிகரிக்காத குவான் குவைடோ, குறித்த முடிவு வலிதற்றது என குறிப்பிட்டுள்ளார்.
26 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago