Freelancer / 2026 மார்ச் 08 , மு.ப. 09:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் உள்ள எரிபொருள் தாங்கிகள் மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது எரிபொருள் தாங்கிகள் தீக்கிரையாகியுள்ளன.
குவைத் சர்வதேச விமான நிலையத்தில் அமைந்துள்ள எரிபொருள் தாங்கிகள் மீது ஆளில்லா விமான தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக குவைத் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இன்று அதிகாலை வானூர்தி நிலைய வளாகத்தில் உள்ள எரிபொருள் களஞ்சிய முனையத்தை இலக்கு வைத்து இந்த ஆளில்லா விமான தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தாக்குதலினால் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த தீயணைப்புப் படையினரும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் சம்பவ இடத்தில் தீவிரமாகப் பணியாற்றி வருவதாக குவைத் அரசாங்கம் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளது.
அதேநேரம், இந்தத் தாக்குதலினால் ஏற்பட்ட சேத விபரங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்த தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. (a)

2 hours ago
09 Mar 2026
09 Mar 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
09 Mar 2026
09 Mar 2026