2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சடலங்களைத் தேடி அலையும் தன்னார்வலர்கள்

Ilango Bharathy   / 2023 ஜனவரி 05 , மு.ப. 10:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக நாடுகளின் எதிர்ப்பையும் மீறி , உக்ரேன் மீது ரஷ்யா கடந்த 10 மாதங்களுக்கு மேலாகத் தாக்குதல் நடத்தி வருகின்றது.

அதே சமயம் உக்ரேனும்  ரஷ்யா மீது பதில் தாக்குதல் நடத்தி வருகின்றது. இப் போரில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் உயிரிழந்துள்ள நிலையில்  அண்டை நாடுகளுக்கு அகதிகளாக உக்ரேனைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் தஞ்சம் புகுந்து வருகின்றனர்.

இந்நிலையில் போர்களத்தில் வீரமரணமடைந்த உக்ரேன் இராணுவத்தினரின் உடல்களைத் தேடிக் கண்டுபிடித்து அவர்களது பெற்றோரிடம் ஒப்படைக்கும் பணியில் உக்ரேனைச் சேர்ந்த தன்னார்வலர்கள் ஈடுபட்டுவருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

”தாய்நாட்டிற்காக உயிர்தியாகம் செய்வோரின் உடல்கள் காடு, கழனிகளில் கேட்பாரின்றி கிடப்பதால், அவற்றை மீட்டு பெற்றோரிடம்கொண்டு சேர்ப்பதன் மூலம் அவர்களது  உடல்கள் முறைப்படி நல்லடக்கம் செய்யமுடியும் எனவும்” அவர்கள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .