Freelancer / 2025 டிசெம்பர் 06 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான கொள்கையை பிரதமர் மோடி தலைமையிலான இந்திய அரசு பின்பற்றி வருவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் பாராட்டு தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்ற இந்திய - ரஷ்ய வணிக மன்றத்தில் உரையாற்றுகையில் புடின் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
பிரதமர் மோடியின் தலைமையில் இந்தியா இறையாண்மையுடன் கூடிய சுதந்திரமான (வெளியுறவு) கொள்கையைப் பின்பற்றி வருகிறது. அதேநேரத்தில், மிகச் சிறந்த பலன்களையும் அடைந்து வருகிறது. இந்தியப் பொருளாதாரம் இன்று உலகின் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதாரங்களில் ஒன்று. பிரதமர் மோடியின் சிறந்த பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் இந்தியாவில் தயாரிப்போம் திட்டம் போன்ற மைல்கல் முயற்சிகளுக்கு நன்றி. இந்தியா தொழில்நுட்ப ரீதியாக இறையாண்மை கொண்டதாக மாறி வருகிறது. இந்தியாவின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருந்துத் துறைகள் உலகில் முன்னணி இடத்தைப் பிடித்துள்ளன.
ரஷ்யாவும் இந்தியாவும் நீண்டகால வர்த்தக கூட்டாளிகள். கடந்த மூன்று ஆண்டுகளில் 80 வீதம் வரை இருதரப்பு வர்த்தகம் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இருதரப்பு வர்த்தகம் 64 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற சாதனை அளவை எட்டியது. இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீட்டை மேலும் அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்று தெரிவித்துள்ளார். (a)

18 minute ago
2 hours ago
05 Dec 2025
05 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
2 hours ago
05 Dec 2025
05 Dec 2025