Editorial / 2022 நவம்பர் 24 , மு.ப. 11:30 - 0 - {{hitsCtrl.values.hits}}

சீனாவில் ஒரே நாளில் 31 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இந்நிலையில் கொரோனா பாதித்த பகுதிகளில் சீன அரசு கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க அதனை எதிர்த்து மக்கள் போராட்டத்தில் இறங்கினர்.
சீனாவில் நேற்று ஒரே நாளில் 31 ஆயிரத்து 454 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது இதில் 25,517 பேருக்கு அறிகுறி இல்லாமல் தொற்று உறுதியானது. கடந்த 2019 டிசெம்பர் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்தில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. உலகம் முழுவதும் கொரோனா தாக்கம் படிப்படியாக குறைந்துவரும் நிலையில் சீனாவில் அண்மைக்காலத்தில் மிக அதிகமாக ஒரு நாள் பாதிப்பு பதிவாகியுள்ளது.
ஜீரோ கொவிட் என்ற இலக்குடன் நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் சீன அரசு தொற்று கண்டறியப்பட்ட பகுதிகளில் கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த முயற்சிக்கிறது. ஆனால், கொரோனா வீரியம் குறைந்த நிலையிலும் வாழ்வாதாரத்தை பாதிக்கும் அளவில் நடவடிக்கை எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குறிப்பாக சீனாவின் ஐஃபோன் தயாரிப்பு ஆலை அமைந்துள்ள செங்சோவ் பகுதியில் பொலிஸாருக்கும் ஊழியர்களுக்கும் இடையே கடும் போராட்டம் வெடித்தது. கொரோனாவால் விடுப்பில் சென்றவர்களுக்குப் பதிலாக வேறு பணியாட்களை நியமிக்கக் கண்டனம் தெரிவித்து போராட்டம் வெடித்தது.
15 minute ago
20 minute ago
32 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
20 minute ago
32 minute ago
47 minute ago