Editorial / 2017 செப்டெம்பர் 19 , பி.ப. 11:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
காஷ்மிர் விவகாரத்தை, ஐ.நா கூட்டத்தில் எழுப்பிய பாகிஸ்தான், சர்வதேச பயங்கரவாதத்தின் முகமாக திகழ்கின்றது என, இந்தியா கூறியுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் காஷ்மிர் விவகாரத்தை, பாகிஸ்தான் எழுப்பியது. அங்கு மனித உரிமை மீறல்கள் அதிகளவில் நடக்கின்றன எனவும், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் துன்புறுத்தப்படுகின்றனர் எனவும் புகார் கூறியது.
இதற்குக் கண்டனம் தெரிவித்து, ஐ.நா மனித உரிமைகள் அமைப்புக்கான இந்தியத் தூதர் விஷ்ணு ரெட்டி கூறியதாவது:
“தனது அரசியல் இலாபத்துக்காக, சர்வதேச அமைப்புகளை, பாகிஸ்தான் தவறாகப் பயன்படுத்தி வருகிறது. காஷ்மிர், இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி. எதிர்காலத்திலும் இதுவே நீடிக்கும். ஆனால், காஷ்மிரின் சில பகுதிகளை, பாகிஸ்தான் சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ளது. ஜம்மு - காஷ்மிர் குறித்து பாகிஸ்தான் தெரிவிக்கும் அனைத்துப் புகார்களையும் இந்தியா நிராகரிக்கிறது. இது, முற்றிலும் உண்மைக்குப் புறம்பானது. காஷ்மிரின் நிலைத்தன்மைக்கு, பயங்கரவாதம் பெரிய பிரச்சினையாக உள்ளது. இதில் தனது பங்களிப்பை மறைக்க முயற்சி செய்யும் பாகிஸ்தான், சர்வதேச அளவில் நம்பிக்கையை இழந்துவிட்டது.
“உண்மையில் பாகிஸ்தான், சர்வதேச பயங்கரவாதத்தின் முகமாக உள்ளது. லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஸ் இ முகமது போன்ற தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்புகள் பாகிஸ்தானில் செயற்படுவதை, அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ஒப்புக் கொண்டுள்ளார். சர்வதேச அளவில் பயங்கரவாதத்துக்கு எதிரான விழிப்புணர்வு அதிகரித்து வரும் நிலையில், அந்நாடு, பயங்கரவாதிகளைக் கட்டுப்படுத்துவதுடன், அவர்களை நீதிக்கு முன்நிறுத்த வேண்டும்.
“காஷ்மிரில் எல்லை தாண்டி, பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவது குறித்த ஆதாரங்கள், அந்நாட்டிடம் அளிக்கப்பட்டன. ஆனால், அதன் மீது நடவடிக்கை எடுக்காமல், சர்வதேச நாடுகளைத் திசைதிருப்பும் முயற்சியில், அந்நாடு ஈடுபட்டுள்ளது.
“ஜம்மு - காஷ்மிர் மக்கள், இந்தியாவின் ஜனநாயக முறையை அங்கிகரித்துள்ளனர் என்பதோடு, ஏற்றுக் கொண்டனர். ஆனால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மிரில், குழப்ப நிலை நீடிக்கிறது. பயங்கரவாதத்தின் மையமாகத் திகழ்கிறது. அங்கும், பலூசிஸ்தானிலும் நடக்கும் மனித உரிமை மீறல்கள், வருத்தத்தை அளிக்கின்றன” என்று கூறியுள்ளார்.
30 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
30 minute ago
2 hours ago
2 hours ago
3 hours ago