S.Renuka / 2026 ஏப்ரல் 08 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
மத்திய கிழக்கு நாடுகளில் நீடித்து வரும் போர்ச் சூழலால் பாதிக்கப்பட்டுள்ள சர்வதேச மாணவர்களுக்கு உதவும் வகையில், கனடாவின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள் விசேட சலுகைகளை அறிவித்துள்ளன.
குவீன்ஸ் (Queen’s) மெக்கில் (McGill) மற்றும் விக்டோரியா உள்ளிட்ட பல்கலைக்கழகங்கள் கல்விக் கட்டணம் செலுத்துவதற்கான கால நீடிப்பு மற்றும் பரீட்சைகளை ஒத்திவைக்கும் வசதி போன்ற பல்வேறு சலுகைகளை வழங்க முன்வந்துள்ளன. போரினால் தங்கள் குடும்பத்தினரை அல்லது நிதி ஆதாரங்களை இழந்த மாணவர்களுக்கு உதவும் வகையில் இந்த செயற்றிட்டம் (Project) வடிவமைக்கப்பட்டுள்ளது.
குவீன்ஸ் பல்கலைக்கழகம் குளிர்காலக் கல்விக் கட்டணத்தைச் செலுத்த எவ்வித அபராதமுமின்றி கால நீடிப்பு வழங்கியுள்ளது. விக்டோரியா பல்கலைக்கழகம் நிலுவையில் உள்ள கட்டணங்களுக்காக மாணவர்களின் பதிவுகளை நிறுத்தி வைப்பதைத் தவிர்ப்பதுடன், அவசரகால நிதி உதவிகளையும் வழங்கி வருகின்றது.
கார்ல்டன் மற்றும் டொராண்டோ பல்கலைக்கழகங்கள் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்களது பரீட்சைகளை ஒத்திவைக்க அல்லது பாடப்பணிகளுக்கான (Assignments) காலக்கெடுவை நீட்டிக்க அனுமதி வழங்கியுள்ளன.
போர்க்களத்தில் உறவினர்களைக் கொண்டுள்ள மாணவர்கள் எதிர்கொள்ளும் மன அழுத்தத்தைக் குறைக்க, விசேட ஆலோசனைகளும் மனநல உதவிகளும் விரிவுபடுத்தப்பட்டுள்ளன.
ஈரான், இஸ்ரேல், பாலஸ்தீனம், லெபனான், சிரியா உள்ளிட்ட பல மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் இந்தச் சலுகைகளைப் பெற்றுக்கொள்ள முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டொராண்டோ பல்கலைக்கழகத்தின் பட்டதாரி மாணவர் சங்கம், கடுமையான நிதி நெருக்கடியில் உள்ள மாணவர்களுக்கு 1,000 டொலர்கள் வரை அவசரகால உதவித்தொகை வழங்கத் தீர்மானித்துள்ளது.
கனேடியப் பல்கலைக்கழகங்களின் இந்த மனிதாபிமான நடவடிக்கை, போர்ச் சூழலில் சிக்கியுள்ள நூற்றுக்கணக்கான சர்வதேச மாணவர்களுக்குப் பெரும் ஆறுதலை அளித்துள்ளது.
12 minute ago
14 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
44 minute ago