2025 டிசெம்பர் 01, திங்கட்கிழமை

சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த தடை

Freelancer   / 2024 மே 14 , பி.ப. 03:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெற்கு அவுஸ்திரேலியாவில் சமூக ஊடகம் பயன்படுத்த சிறுவர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இன்றைய நவீன உலகில் சமூக ஊடகங்களை பயன்படுத்தாதவர்களே இல்லை என்ற அளவுக்கு, அது முக்கிய பங்கு வகிக்கிறது.

குறிப்பாக குழந்தைகளின் உடல் ஆரோக்கியம், மன வளர்ச்சிக்கு சமூக ஊடகங்கள் பெரும் தீங்கு விளைவிக்கிறது. எனவே முதல்முறையாக தெற்கு அவுஸ்திரேலியா மாகாணத்தில் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் சமூக ஊடங்கள் பயன்படுத்த தடை விதித்து முதல் மந்திரி பீட்டர் மலினஸ்காஸ் அறிவித்துள்ளார்.

அதன்படி சிறுவர்கள் சமூக ஊடகங்களை பயன்படுத்த பெற்றோரின் ஒப்புதல் அவசியம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடைமுறையை ஆராய உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி தலைமையிலான ஒரு குழுவையும் அரசாங்கம் நியமித்துள்ளது.

இந்நிலையில், இந்த அறிவிப்புக்கு பல்வேறு தரப்பினரும் ஆதரவு தெரிவித்துள்ளனர்.S


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X