Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2024 ஜனவரி 26 , பி.ப. 12:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
சவுதியில் மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது என வெளிநாட்டு செய்தி சேவைகள் செய்தி வெளியிட்டுள்ளன.
முஸ்லிம் அல்லாத வெளிநாட்டு தூதர்களுக்கு மட்டுமே மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது, சவுதிகளுக்கு 70 ஆண்டுகளுக்கு பிறகு மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியாவில் மதுவுக்கு 1950 ஆம் ஆண்டு தடை விதிக்கப்பட்டது. அப்போது சவுதி அரேபியாவின் மன்னராக அப்துல் அஜீஸ் இருந்தார்.
மன்னரின் மகன் இளவரசர் மிஷாரி மது அருந்திவிட்டு, ஜெட்டாவில் பிரித்தானிய துணைத் தூதராக இருந்த சிரில் ஒஸ்மானை சுட்டுக் கொன்றதை அடுத்து மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது.
தற்போது பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் சவுதி அரேபியாவை சுற்றுலா மற்றும் வணிக தலமாக மாற்ற நடவடிக்கை எடுத்துள்ளார். இதனுடன் இணைந்து மதுபானக் கடை திறக்கப்பட்டது. (AFP)
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .