2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சிங்கங்களை விற்கிறது பாகிஸ்தான்

Editorial   / 2022 ஓகஸ்ட் 08 , பி.ப. 05:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

லாகூர் சஃபாரி உயிரியல் பூங்காவில் உள்ள நிர்வாகம் அதன் ஆப்பிரிக்க சிங்கங்களில் சிலவற்றை விற்க திட்டமிட்டுள்ளது. ஒரு சிங்கம் பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் PKR 1,50,000   என்ற விலையில் விற்கத் தயாராக உள்ளது என்று பாகிஸ்தானிய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

  ஒரு எருமை பாகிஸ்தானிய ரூபாய் மதிப்பில் 350,000  வரையிலும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

லாகூர் சஃபாரி உயிரியல் பூங்கா நிதிப்பற்றாக்குறையில் செயல்பட்டு வருகிறது.மிருகக்காட்சிசாலையில் விலங்குகளை பராமரிக்கும் செலவு மற்றும் இதர செலவுகளை சமாளிக்க போதுமான நிதி அவர்களிடம் இல்லை. நன்கொடையாக மட்டுமே நிதி திரட்ட முடியாது என்பதனால் இந்த திட்டத்தை கையில் எடுத்துள்ளது என்றும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X