Editorial / 2019 செப்டெம்பர் 06 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி 95 வயதான ராபர்ட் முகபே உடல்நலக்குறைவால் சிங்கப்பூரில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அவர் சிகிச்சை பலனின்றி காலமானதாக கூறப்படுகிறது.
இந்த தகவலை தற்போதைய ஜனாதிபதி எம்மர்சன் மநங்காக்வா (Emmerson Mnangagwa) உத்தியோகப்பூர்வமாக தெரிவித்து உள்ளார்.
சிம்பாப்வேயில் கடந்த 2017ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ராணுவ புரட்சி மூலம் ஜனாதிபதி பதவியில் இருந்து ரொபர்ட் முகாபே இருந்து நீக்கப்பட்டார். இடைக்கால ஜனாதிபதியாக எம்மெர்சன் ம்நாங்காவா பொறுப்பேற்றார்.
அதைத்தொடர்ந்து ஜனாதிபதி பதவிக்கு கடந்த 2018ம் ஆண்டு ஜூலை 30-ம் திகதி நடைபெற்ற தேர்தலில் தற்காலிக ஜனாதிபதி எம்மர்சன் ம்நங்காக்வா-வை எதிர்த்து எதிர்க்கட்சி தலைவர் நெல்சன் சாமிசா போட்டியிட்டார்.
இந்த தேர்தலில் சுமார் 50 சதவீதம் வாக்குகளை பெற்ற எம்மர்சன் ம்நங்காக்வா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதையடுத்து அவர், கடந்த ஆண்டு ஒகஸ்ட் மாதம் 18ஆம் திகதி நாட்டின் ஜனாதிபதியாக பதவி ஏற்றார்.
இந்த நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்ட ரொபர்ட் முகாபே சிங்கப்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி அவர் உயிர் பிரிந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
9 hours ago
02 May 2026
02 May 2026