Editorial / 2019 ஜூன் 04 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிரியா மீது கடந்த 24 மணித்தியாலங்களுக்குள், இரண்டாவது சுற்றுத் தாக்குதல்களை இஸ்ரேல் நேற்று முன்தினம் நடத்தியதாக, சிரியாவின் அரச செய்தி முகவரகமான சனா தெரிவித்துள்ளது.
சிரியாவில் குண்டுத் தாக்குதல்களை நிறுத்துமாறு ரஷ்யா, ஈரானை ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கோரியுள்ள நிலையிலேயே குறித்த தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளன.
சிரியத் தலைநகர் டமஸ்கஸ்ஸுக்கு தெற்காகவுள்ள இராணுவ, புலனாய்வு நிலைகள் மீது பதிலடித் தாக்குதல்களை நடத்தி 10 பேரைக் கொன்றதைத் தொடர்ந்த சில மணித்தியாலங்களில், ஹொம்ஸ் மாகாணத்திலுள்ள வான்தளமொன்றை இலக்கு வைத்ததாக இஸ்ரேலை சிரியா குற்றஞ்சாட்டியுள்ள நிலையில், இங்கு ஐந்து பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை தங்களது வான் தடுப்புகள் முறியடித்ததாகவும், டி-4 வான் தளத்தை இலக்கு வைத்த றொக்கெட்டுகள் இரண்டை அழித்ததாக இராணுவத் தகவல் மூலமொன்று தெரிவித்ததாக சனா தெரிவித்துள்ளது.
இதுதவிர, எஞ்சிய றொக்கெட்டுகள் படைவீரரொருவரைக் கொன்றதாகவும், இருவரைக் காயப்படுத்தியதாகவும், ஆயுதச் சேமிப்பு மையமொன்றை சேதப்படுத்தியதாகவும் குற்இத்த தகவல் மூலம் மேலும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், சிரியப் படைவீரரொருவர் உட்பட ஐவர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்துள்ள பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம், றொக்கெட் சேமிப்பு மையமொன்று அழிக்கப்பட்டதாகக் கூறியுள்ளது.
இதேவேளை, எதிரணியின் கட்டுப்பாட்டிலுள்ள வடமேற்கு சிரியாவிலுள்ள நகரமான அஸாஸில், சனநெருக்கடி மிக்க சந்தை, பள்ளிவாசலொன்றுக்கு அருகே நேற்று முன்தினம் இடம்பெற்ற கார்க் குண்டுத் தாக்குதலொன்றில், நான்கு சிறுவர்கள் உள்ளடங்கலாக குறைந்தது 17 பேர் கொல்லப்பட்டதுடன், 20க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக மனித உரிமைகளுக்கான சிரியக் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.
36 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago
1 hours ago