Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2022 ஜூன் 14 , பி.ப. 07:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
பேன் தொல்லையினால் சிறுமியொருவர் உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவில், அரிசோனா மாகாணத்தில் டுக்சன் என்னும் பகுதியில் வசித்து வந்த 9 வயதான சிறுமியொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி இரத்த சோகை நோய் மற்றும் கடுமையான பேன் தொல்லையினால் அவதிப்பட்டிருந்தார் எனவும், இதனால் அவரது தலையில் காயங்கள் பல காணப்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
மேலும் அக்காயத்தின் மூலமாக தலை மற்றும் முகத்தில் கிருமித்தொற்று ஏற்பட்டுள்ளதோடு, இரத்த வாந்தி மற்றும் கடுமையான வயிற்றுப்போக்கினாலும் அவர் அவதிப்பட்டு வந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அச் சிறுமியின் பாட்டியும் அம்மாவும் அவரை சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் நாளடையில் அச்சிறுமியின் உடல் மேலும் மோசமடைந்த நிலையில் அவர் உயிரிழந்துள்ளார் எனவும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் இது குறித்து பொலிஸார் மேற்கொண்ட விசாரணையில் அச் சிறுமியின் பாட்டியும் அம்மாவும் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமையே அவர் உயிரிழந்துள்ளமைக்குக் காரணமெனத் தெரிய வந்துள்ளது.
இதனையடுத்து இருவரையும் கைது செய்துள்ள பொலிஸார், அவர்கள் மீது கொலை வழக்குப் பதிவு செய்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 minute ago
21 minute ago
24 minute ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
21 minute ago
24 minute ago
2 hours ago