Freelancer / 2026 ஜனவரி 05 , மு.ப. 09:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவுக்குள் போதை பொருட்களை கடத்துவதாக குற்றஞ்சாட்டி, அந்நாட்டு படைகளால் சிறைபிடிக்கப்பட்ட வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ, மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ், ஆகியோர் இன்று மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.
இந்த கைது சம்பவத்துக்கு பின், நிலைமை சீரடையும் வரை வெனிசுலாவை அமெரிக்காவே நிர்வகிக்கும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்தார்.
அதிபர் டிரம்பின் இந்த நடவடிக்கையை உலக நாடுகள் பலவும் கண்டித்துள்ளன. மதுரோவை உடனடியாக விடுவிக்க வேண்டும் என, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகள் வலியுறுத்தியுள்ளன.
இதற்கிடையே வெனிசுலா உச்சநீதிமன்றம், அந்த நாட்டின் துணை அதிபர் டெல்சி ரோட்ரிக்சை இடைக்கால அதிபராக நியமித்துள்ளது.
அமெரிக்காவின் நடவடிக்கை குறித்து விவாதிக்க ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் இன்று அவசர கூட்டத்தை கூட்டியுள்ளது. R
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
4 hours ago