J.A. George / 2024 ஜூலை 16 , பி.ப. 01:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனா வழியாக செல்லும் பயணிகளுக்கான விசா நடைமுறையில் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.
அதன்படி ஏனைய நாட்டுக்கு செல்லும் பயணிகள் சீனாவில் 144 மணி நேரம் அதாவது 6 நாட்கள் வரை சீனாவில் தங்கிக் கொள்ளலாம்.
அத்துடன், இந்தக் காலப்பகுதியில் சீனாவை சுற்றியும் பார்க்க முடியும்.
இதன்மூலம் அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து உள்ளிட்ட 54 நாடுகளைச் சேர்ந்தவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது ஹெனான் மாகாணம் செங்சூ சின்செங் விமான நிலையம், யுனான் மாகாணம் லிஜாங் விமான நிலையம் மற்றும் அங்குள்ள துறைமுகத்திலும் இந்த விசா தளர்வு நடைமுறை விரிவுபடுத்தப்பட்டு உள்ளது.
இதன்மூலம் விசா தளர்வு அளிக்கப்பட்டுள்ள விமான நிலையம் மற்றும் துறைமுகங்களின் எண்ணிக்கை 37 ஆக உயர்ந்துள்ளது.
19 minute ago
38 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
38 minute ago
54 minute ago