2025 ஜூலை 15, செவ்வாய்க்கிழமை

சீன கண்காணிப்பை அமெரிக்கா அம்பலமாக்கும்

Freelancer   / 2023 பெப்ரவரி 13 , பி.ப. 06:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

தனது பாதுகாப்பு மற்றும் தனது நட்பு நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் சீனாவின் பெரிய கண்காணிப்பு நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவதற்கும் நிவர்த்தி செய்வதற்கும் பரந்த முயற்சிகளைத் தொடர்வதை கவனிக்கவுள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

அமெரிக்காவின் இறையாண்மையை மீறுவதன் மூலம் சீனா பொறுப்பற்ற முறையில்  செயல்பட்டதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் நெட் பிரைஸ் செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.
 
சீனாவின் பொறுப்பற்ற நடவடிக்கைகள் அமெரிக்காவுக்கும் உலகுக்கும் தெரியும் என்றும் சீனாவின் பலூன் சம்பவம் தொடர்பாக 40 நாடுகளுடன் அமெரிக்கா தொடர்பு கொண்டுள்ளது என்றும் குறிப்பிட்டார்.

உலகெங்கிலும் உள்ள நட்பு நாடுகளிடமும் ஐந்து கண்டங்களில் உள்ள சுமார் 40 நாடுகளிலும் இந்த மீறல்கள் குறித்து தாம் கேள்விகளைப் பெறுவதாக அவர் குறிப்பிட்டார்.

“எமது இறையாண்மையை மீறுவதன் மூலம் சீனா பொறுப்பற்ற முறையில் செயல்பட்டது. இது ஒரு ஆழமான பொறுப்பற்ற செயலாகும், இதற்குப் பதிலடியாக நாங்கள் எங்கள் நலன்களைப் பாதுகாக்க பொறுப்புடன் செயல்பட்டோம்” என்றார்.

“இது சமீபத்திய நாட்களில் அமெரிக்க மக்களால் மட்டுமே பார்க்க முடிந்த ஒன்று அல்ல" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
 
கேள்விகளைக் கேட்பதற்கும், உலகெங்கிலும் உள்ள பங்காளிகளிடமிருந்தும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதற்கும், இந்தச் சவாலை அணுகுவதற்கும் நாங்கள் அறிந்ததைப் பகிர்ந்து கொள்வது முக்கியம் என்று தாங்கள் நினைக்கிறோம் என்று குறிப்பிட்டார்.

அமெரிக்காவின் வடக்கு கட்டளைக்கு நியமிக்கப்பட்ட அமெரிக்க போர் விமானம், அமெரிக்க வான்வெளியில் தெற்கு கரோலினா கடற்கரையில் உள்ள தண்ணீருக்கு மேல் சீனாவுக்கு சொந்தமான உயரமான கண்காணிப்பு பலூனை வெற்றிகரமாக சுட்டு வீழ்த்தியது என்று பெப்ரவரி 4 அன்று, அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் அறிக்கை வெளியிட்டார்.

அமெரிக்க கண்டத்தில் உள்ள மூலோபாய தளங்களை கண்காணிக்கும் முயற்சியில் சீனா பயன்படுத்திய பலூன் அமெரிக்க கடல் பகுதிக்கு மேலே சுட்டு வீழ்த்தப்பட்டது என்று அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .