2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

சூடான உணவைப் பரிமாறாததால் ஊழியர் சுட்டுக்கொலை

Ilango Bharathy   / 2022 ஓகஸ்ட் 07 , மு.ப. 08:41 - 0     - {{hitsCtrl.values.hits}}


உணவினை சூடாகப் பரிமாறவில்லை என்ற காரணத்தினால் பிரபல உணவகமொன்றைச் சேர்ந்த ஊழியர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அமெரிக்காவில் பெரும்  அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செயல்பட்டு வரும் மெக்டொனால்ட்ஸ் நிறுவன உணவகத்திலேயே கடந்த திங்கட்கிழமை இரவு 7 மணியளவில்  இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவ தினத்தன்று மைக்கேல் மோர்கன் என்ற 20 வயதான இளைஞன்  தனது தாயாரான லிசா புல்மோரை அழைத்துக்கொண்டு மெக்டொனால்ட்ஸ்க்கு வருகை தந்துள்ளார்.

அங்கு பணிபுரியும் கெவின் ஹோலோமேன்  என்ற 23 வயதான இளைஞன்  வழங்கிய பிரஞ்சு பிரைஸ் எனப்படும் உணவு சூடாக இல்லை எனக் குற்றஞ்சாட்டப்பட்டதாகவும், இதன் போது ஏற்பட்ட வாக்குவாதம் தீவிரமடைந்ததையடுத்து  குறித்த ஊழியரை மோர்கன் துப்பாக்கியால் சுட்டதாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவத்தில் குறித்த ஊழியர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார் எனவும், மோர்கன் பொலிஸாரால்  கைது செய்யப்பட்டுள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மோர்கன் இதற்கு முன்பு பலமுறை குற்ற செயல்களில் ஈடுபட்ட்தற்காக கைது செய்யப்பட்டவர் என்பது விசாரணையில் தெரியவந்தது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X