2025 ஓகஸ்ட் 27, புதன்கிழமை

செவ்வாயில் உருளைக் கிழங்கு வீடு

Ilango Bharathy   / 2023 மார்ச் 28 , மு.ப. 10:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

செவ்வாய் கிரகத்தில் உருளைக்  கிழங்குகளைப் பயன்படுத்தி வீடுகளைக் கட்டமுடியுமென விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 பிரித்தானியாவில்  உள்ள மான்செஸ்டர் பல்கலைக்கழகத்தைச் சேர்நத விஞ்ஞானிகளே இதனைத் தெரிவித்துள்ளனர்.

குறித்த விஞ்ஞானிகள் சமீபத்தில் செவ்வாய் கிரகத்தில் கட்டமைப்புகளை உருவாக்கப் பயன்படும் ஸ்டார்க்ரீட் என்ற உருளைக்கிழங்கை அடிப்படையாக கொண்டு இக்கலவையை உருவாக்கியுள்ளனர்.

இதனுடன் விண்வெளித் தூசு, உப்பு மற்றும் உருளைக்கிழங்கின் மாச்சத்து போன்ற பொருட்களை இணைத்து வீடு கட்ட முடியும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

 இக் கலவை 32 மெகாபாஸ்கல்ஸ் என்ற அளவைக் கொண்ட வலிமையுடன் இருப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X