2026 மே 09, சனிக்கிழமை

dd

சேவலால் பெண்கள் உட்பட 20 பேர் சுட்டுக் கொலை

Ilango Bharathy   / 2022 மார்ச் 29 , பி.ப. 06:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

மெக்சிகோவில் சேவல் சண்டை விடுவதில் ஏற்பட்ட மோதல் காரணமாக 20 பேர் சுட்டுக் கொலைசெய்யப்பட்ட சம்பவம் அந்நாட்டில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அண்மையில் அதிகாரத்திற்காக போட்டியிடும் இரு போதைக் கும்பலிடையே இடம்பெற்ற இரகசிய சேவல் சண்டையிலேயே இத்துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

 மேலும் இத்துப்பாக்கிச் சூட்டில் பெண்கள் உட்பட 20 பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் படுகாயம் அடைந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்நிலையில் இச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .