2026 ஜனவரி 13, செவ்வாய்க்கிழமை

ஜனாதிபதி ட்ரம்ப்பின் ஆபாச ’ஜோக்ஸ்’

S.Renuka   / 2026 ஜனவரி 13 , மு.ப. 11:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட்டுடன் பயணம் செய்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஆபாசமாக நகைச்சுவை பேசியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், மார்-அ-லாகோவில் இருந்து வொஷிங்டன் நோக்கி எயார் போர்ஸ் ஒன் விமானத்தில் திரும்பினார். அவருடன் வெள்ளை மாளிகையின் ஊடக செயலாளர் கரோலின் லீவிட்டும் விமானத்தில் பயணித்துள்ளார்.

இதன்பின்னர் ட்ரம்ப் செய்தியாளர்களிடம் பேசும்போது, பயணத்தின்போது, நடுவானில் விமானம் திடீரென குலுங்கியது.

 இதனால் நான் பதற்றமடைந்தேன். பிடித்துக்கொள்ள வசதியாக ஏதும் இருக்கிறதா? என தேடி பார்த்தேன். ஆனால், அப்படி பிடித்து கொள்ள முற்றிலும் எதுவுமே இல்லாத ஓரிடத்தில் என்னை வைத்து விட்டீர்கள் என நான் நினைத்தேன்.

ஆனாலும், எதனையாவது பிடித்து கொள்ளலாம் என நான் மீண்டும் தேடி பார்த்தேன். ஆனால், நிச்சயம் அது கரோலின் அல்ல என கூறினார். 

அவர் இதனை கூறும்போது ட்ரம்புக்கு பின்னால் நின்று அதனை கேட்டு கொண்டே இருந்த லீவிட் சிரித்து விட்டார். ட்ரம்ப் இப்படி கூறி விட்டு, பின்னால் திரும்பி லீவிட்டை பார்த்துள்ளார்.

இதனை கேட்டதும் செய்தியாளர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. 

இதற்கு நெட்டிசன்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். 

அவரை வேடிக்கையான மனிதர் என ஒருவரும், ட்ரம்ப் செல்லும் அறையில் எல்லாம் விளக்கை ஏற்றி ஒளியேற்படுத்துவார். 

அவர் எப்போதும் நகைச்சுவையான ஜனாதிபதி என மற்றொருவரும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .