Editorial / 2019 ஏப்ரல் 02 , மு.ப. 09:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
சீனாவின் ஜியாங்சு மாகாணத்திலுள்ள குன்ஷண் நகரத்திலுள்ள உலோக வடிவமைப்புத் தொழிற்சாலையொன்றின் வெளியிலிருந்த கழிவு உலோகத் தாங்கியொறு வெடித்ததில் ஏழு பேர் நேற்று முன்தினம் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்தவகையில், தேசிய ரீதியில் தொழிற்சாலை பாதுகாப்புச் சோதனைத் திட்டத்தை சீனா ஆரம்பித்த நிலையில், ஜியாங்சு மாகாணத்தில் கடந்த மாதம் இடம்பெற்ற இரண்டாவது வெடிப்பு இதுவாகும்.
குறித்த வெடிப்பு காரணமாக தொழிற்சாலை தீப்பற்றியதாக தனது உத்தியோகபூர்வ வெய்போ கணக்கில் நேற்று முன்தினம் தெரிவித்துள்ள உள்ளூர் அரசாங்கம், என்ன காரணத்தால் வெடிப்பு இடம்பெற்றதற்கான விசாரணை மேற்கொள்ளப்படுவதாகக் கூறியுள்ளது.
குறித்த சம்பவத்தில், மோசமாகக் காயமடைந்த ஒருவர் தவிர மேலும் ஐவர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், குறித்த சம்பவத்தின் காரணமாக தமது இம்மாத வருமானமானது 40 தொடக்கம் 50 சதவீதத்தால் குறைவடையும் என இத்தொழிற்சாலையின் உரிமையாளரான தாய்வானைத் தளமாகக் கொண்ட குன்ஷண் வஃபர் டெக்னோலஜி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, குன்ஷண் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முகவரகத்தால், நீர் மாசு விதிகளை மீறியதற்காக, குறித்த நிறுவனம் மீது கடந்தாண்டு தண்டம் விதிக்கப்பட்டதாக சீன அரச பத்திரிகையான பெய்ஜிங் நியூஸ் தெரிவித்துள்ளது.
ஷங்காயிலிருந்து 70 கிலோ மீற்றர் மேற்காகவுள்ள குன்ஷண்ணில் 1,000க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் காணப்படுகின்றன.
இதே மாகாணத்திலுள்ள யன்செங் நகரத்திலுள்ள இரசாயனத் தொழிற்சாலையில் கடந்த மாதம் 21ஆம் திகதி இடம்பெற்ற வெடிப்பில் 78 பேர் கொல்லப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
25 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago