2025 நவம்பர் 05, புதன்கிழமை

ஜுலை 5இல் பாதீடு தாக்கல்

Editorial   / 2019 ஜூன் 03 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எதிர்வரும் ஜுலை மாதம் 5ஆம் திகதி, மத்திய அரசாங்கத்தின் பாதீடு தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்படுகின்றது.

மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டத்தின் போதே, இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள நிர்மலா சீதாராமன், 2019 - 2020ஆம் நிதியாண்டுக்கான பாதீட்டைத் தாக்கல் செய்யவுள்ளார் என்று தெரிவிக்கப்படுகின்றத.

முன்னதாக ஜூன் 17ஆம் திகதியன்று கூடவுள்ள நாடாளுமன்றம், ஜூலை 26ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. ஜூன் 20ஆம் திகதி, குடியரசுத்தலைவர் உரையாற்றவுள்ளார்.

தொடர்ந்து ஜூலை 4ஆம் திகதி, பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்மலா சீதாராமன், நாட்டின் முதல் பெண் நிதி அமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். 1970 ஆம் ஆண்டு பிரதமராக இருந்த போது இந்திரா காந்தி, நிதித்துறையை தன்வசம் வைத்திருந்தார். அவரை தவிர்த்து நிதித்துறை பொறுப்பேற்கும் முதல் பெண் நிர்மலா என்பது குறிப்பிடத்தக்கது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X