2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

டிசம்பரில் இந்தியா செல்கின்றார் புடின்

Freelancer   / 2025 ஒக்டோபர் 02 , மு.ப. 06:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் டிசம்பர் மாதம் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் இந்தியாவுக்கு செல்லவுள்ளார் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 
டிசம்பர் 5 ஆம் மற்றும் 6 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் கலந்துகொள்ள அவர் செல்லவுள்ளார் என்று  தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
கடந்த ஓகஸ்ட் மாதம் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலின் ரஷ்ய பயணத்தின் போது, புடின் இந்திய வருகையில் இணைவார் என்று குறிப்பிடப்பட்டது, ஆனால் நேரம் குறித்து எந்த அதிகாரபூர்வ குறிப்பும் இல்லை.
 
இருப்பினும், சமீபத்தில் சீனாவில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சி மாநாட்டில் இந்தியப் பிரதமர் மோடியும் ரஷ்ய ஜனாதிபதியும் சந்தித்தனர். இரு தலைவர்களும் ஒரு மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X