Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை
Freelancer / 2022 செப்டெம்பர் 10 , பி.ப. 04:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
வேல்ஸ் இளவரசராக வில்லியமும் அவரது மனைவி கேத்தரீன் இளவரசியாகவும் அழைக்கப்படுவார்கள் என பிரித்தானிய மன்னர் சார்லஸ் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
பிரித்தானிய மகாராணி இரண்டாம் எலிசபெத்தின் மறைவால் அவரது மூத்த மகனான இளவரசர் சார்லஸ், புதிய மன்னராக நியமிக்கப்பட்டு, பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.
வேல்ஸின் இளவரசராக வில்லியம் மற்றும் இளவரசியாக கேத்தரீன் (கேத் மிடில்டன்) இருப்பார்கள் என்று மன்னர் சார்லஸ் தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.
அவர்கள் தொடர்ந்து ஊக்கம் ஏற்படுத்தி, விளிம்பு நிலையில் உள்ளவர்களை மைய நிலைக்கு உயர்த்தி, முக்கியத்துவம் வாய்ந்த உதவிகளை வழங்குவதற்கான நமது தேசிய பேச்சுவார்த்தைகளை வழிநடத்தி செல்வார்கள் என்றும் தெரிவித்துள்ளார்.
இளவரசி டயானாவுக்குப் பின்னர், அப்போதைய இளவரசரும் தற்போதைய மன்னருமான சார்லஸை மணந்தபோது டயானா வைத்திருந்த இளவரசி பட்டத்தைப் பயன்படுத்தும் முதல் நபராக கேத் மாறியுள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
6 hours ago