2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

டுவிட்டரின் CEO இனிமேல் இவர்தான்

Ilango Bharathy   / 2023 மே 14 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

டுவிட்டர் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக அமெரிக்காவைச் சேர்ந்த லிண்டா யாக்கரினோ நியமிக்கப்பட்டுள்ளார்.

 டுவிட்டரில் பல்வேறு அதிரடி மாற்றங்களை செய்துவந்த எலான் மஸ்க், அந்நிறுவனத்தின் தலைமை செயற்பாட்டு அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்ததுடன், புதிய தலைமை செயற்பாட்டு அதிகாரியைத்  தேர்வு செய்திருப்பதாகவும் 6 வாரங்களில் அவர் தனது பணியைத்  தொடங்குவார் என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிலையில், பிரபல ஊடக நிறுவனமான NBC Universal-ன் முன்னாள் விளம்பர தலைவராக இருந்த லிண்டா யக்காரினோவை ட்விட்டரின் புதிய சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டு இருப்பதாக எலான் மஸ்க் தனது ட்விட் பதிவில் தெரிவித்துள்ளார்.

 டுவிட்டர் நிறுவனத்தின் விளம்பரம், வணிக செயல்பாடுகளில் லிண்டா கவனம் செலுத்துவார் என்றும், நிறுவனத்தின் தயாரிப்பு வடிவமைப்பு மற்றும் புதிய தொழில்நுட்பத்தில் தான் கவனம் செலுத்து வேன் என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .