Mithuna / 2023 டிசெம்பர் 28 , மு.ப. 10:14 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்க்கு எதிரான பாராளுமன்ற வன்முறை வழக்கில் தீர்ப்பளித்த கொலராடோ மாகாண நீதிமன்றம் அவர் ஜனாதிபதி பதவிக்கு தகுதியற்றவர் என்று கூறியது. மேலும் கொலராடோ மாகாணத்தில் அவருடைய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் பட்டியலில் டிரம்ப் பெயர் இடம்பெறாது. அப்படி இடம் பெற்றிருந்தால் வாக்குகள் எண்ணப்படாது என்று தெரிவித்திருந்தது.
இந் நிலையில் டிரம்புக்கு எதிராக தீர்ப்பளித்த நீதிபதிகளுக்கு மிரட்டல்கள் விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நீதிபதிகள் வீடுகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களின் வீடுகளை சுற்றி கண்காணிப்பு அதிகப்படுத்தப்பட்டுள்ளது.
பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஆனால் தனிப்பட்ட பாதுகாப்பை கருத்தில் கொண்டு விசாரணை குறித்த விளக்கத்தை அவர்கள் வெளியிடவில்லை.
39 minute ago
1 hours ago
10 May 2026
10 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
1 hours ago
10 May 2026
10 May 2026