Editorial / 2018 ஜூன் 12 , பி.ப. 06:09 - 0 - {{hitsCtrl.values.hits}}
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த, அமெரிக்கா ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் இடையேயான சந்திப்பு தொடர்பில், ஈரான் கருத்து வெளியிட்டுள்ளது.
“டிரம்ப் வீட்டுக்கு செல்வதற்கு முன்பு செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தத்தை இரத்து செய்வார்” என ஈரான், வடகொரியாவுக்கு எச்சிரித்துள்ளது.
சிங்கப்பூரில் அணு ஆயுத ஒழிப்பு தொடர்பான வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மற்றும் வடகொரியா ஜனாதிபதி கிம் ஜாங் உன் இன்று கையெழுத்திட்டிருந்தனர்.
வடகொரியா ஜனாதிபதி, கிம் ஜாங் பற்றி தங்களுக்கு தெரியாது, ஆனால், அமெரிக்கா ஜனாதிபதி வீடு செல்வதற்கு முன்னரே அவர் செய்துக்கொண்டுள்ள ஒப்பந்தத்தை இரத்து செய்வார்” என, ஈரான் அரசின் செய்தித்தொடர்பாளர் முகமது பாகேர் நோபாக்ட் தெரிவித்துள்ளார்.
“டொனால்ட் டிரம்பை கிம் ஜாங் நம்பக் கூடாது. ஈரானுடன் அமெரிக்கா செய்து கொண்ட அணு ஒப்பந்தத்தை, டிரம்ப் வெளிநாட்டில் இருக்கும் போதே இரத்து செய்தார் என்பதை மறந்துவிடக்கூடாது” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்
38 minute ago
59 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
59 minute ago
9 hours ago