Freelancer / 2026 மார்ச் 12 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய அரபு அமீரகத்தின் டுபாய் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே ஈரான் ஏவிய இரண்டு ட்ரோன்கள் விழுந்ததில், ஒரு இந்தியர் உட்பட 4 பேர் காயமடைந்தனர்.
ஈரான் மீது இஸ்ரேலும் அமெரிக்காவும் இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. பதிலுக்கு ஈரான், இஸ்ரேல் மீதும், மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்க நிலைகள் மீதும் தாக்குதல்களை நடத்தி வருகிறது.
இந்நிலையில், ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகே ஈரான் ஏவிய இரண்டு ட்ரோன்கள் விழுந்தன. இதில், கானா நாட்டைச் சேர்ந்த இருவர், பங்களாதேஷை சேர்ந்த ஒருவர், இந்தியாவைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 4 பேர் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில், ஈரான் ஏவிய ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை தடுத்து நிறுத்தி வருவதாக ஐக்கிய அரபு அமீரகத்தின் பாதுகாப்பு அமைச்சகம் கூறியுள்ளது.
இந்த தாக்குதல், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு எதிரான ஈரானின் பதில் நடவடிக்கைகளின் ஒரு பகுதி என கூறப்படுகிறது. இரண்டு ட்ரோன்கள் டுபாய் விமான நிலையம் அருகே விழுந்தாலும், விமான போக்குவரத்து வழக்கம்போல நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். (a)

52 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
52 minute ago
1 hours ago