Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 20, செவ்வாய்க்கிழமை
Ilango Bharathy / 2022 ஏப்ரல் 27 , மு.ப. 09:44 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலகப் பணக்காரர்கள் வரிசையில் முதல் இடத்தில் உள்ளவரும், டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் ஸ்தாபகருமான எலோன் மஸ்க், டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலர்களுக்கு வாங்க அண்மையில் சம்மதம் தெரிவித்தார்
இந்நிலையில் டுவிட்டர் தளத்தில் இருந்து தடை செய்யப்பட்ட அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ட்ரம்ப் மீண்டும் சேர்க்கப்படுவார் என தற்போதைய ஜனாதிபதி ஜோ பைடன் நிர்வாகம் கவலையில் உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 2020 ஆம் நடந்த அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் முறைகேடான முறையில் ஜோ பைடன் வெற்றிபெற்றதாக ட்ரம்ப் குற்றம்சாட்டிய நிலையில், அவர் தவறான தகவலைப் பரப்புவதாக டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் அவரது கணக்கை நீக்கியிருந்தன.
இந்நிலையில்,‘ ஜனநாயகத்தின் அடித்தளமாக விளங்குவது கருத்து சுதந்திரம் தான்‘ என எலோன் மஸ்க் கருத்து தெரிவித்துள்ள நிலையில், ட்ரம்ப் மீதான தடையை எலான் மஸ்க் நீக்குவார் என வெள்ளை மாளிகை வட்டாரம் கருதுவதாகக் கூறப்படுகிறது.
மேலும் இதன் எதிரொலியாக 2024 ஆம் ஆண்டு சடைபெறவுள்ள அமெரிக்க ஜனாதிபதித் தேர்தலில் டுவிட்டர் தளத்தின் தாக்கம் அதிகமாக இருக்கும் எனவும் கூறப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .