Ilango Bharathy / 2022 ஜனவரி 03 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
மின்சாரக் கார் உற்பத்தியில் புகழ்பெற்ற டெஸ்லா நிறுவனம், தொழில்நுட்ப ரீதியில் மிகவும் முன்னேறிய திறன் கொண்ட ஸ்மார்ட் தொலைபேசியை அறிமுகப்படுத்த உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது.
'டெஸ்லா பை' என்ற பெயரில் அறிமுகமாக உள்ள இந்த தொலைபேசியை , எலான் மஸ்க்கின் சட்டிலைட் பிராட்பேண்ட் நிறுவனமான 'ஸ்டார்லிங்க்' உடன் இணைப்பை ஏற்படுத்திக் கொள்ளும் என்றும், அதன் மூலம் இணையதள வசதி உள்ளிட்டவை பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

மேலும், இத் தொலைபேசியில் பொருத்தப்பட்டிருக்கும் சூரிய ஒளி தகடின் உதவியுடன், சார்ஜ் செய்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செவ்வாய் கிரகத்திற்கு தனது ஸ்பேஸ் எக்ஸ் விண்கலத்தை அனுப்புவதை எலான் மஸ்க் கனவுத் திட்டமாக கொண்டுள்ள நிலையில், இந்த 'டெஸ்லா பை' தொலைபேசியை அங்கும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளதாகவும், அது குறித்த மேலும் விவரங்கள் வரும் நாட்களில் வெளியாகும் என்றும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 Dec 2025
15 Dec 2025
15 Dec 2025