Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2025 பெப்ரவரி 14 , மு.ப. 08:59 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை, இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை சந்தித்துப் பேசினார். அப்போது பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக இரு தலைவர்களும் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர்.
பிரான்ஸ் சுற்றுப் பயணத்தை நிறைவு செய்த பிரதமர் நரேந்திர மோடி நேற்று முன்தினம் அமெரிக்காவுக்கு சென்றார். தலைநகர் வொஷிங்டனில் உள்ள விமானப் படை தளத்தில் தரையிறங்கிய அவருக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதிகாலை நேரத்தில் கடும் குளிரை பொருட்படுத்தாமல் இந்திய வம்சாவளியினர் திரண்டு வந்து அவரை உற்சாகமாக வரவேற்றனர். அங்கிருந்து அமெரிக்க ஜனாதிபதி மாளிகையில் உள்ள விருந்தினர் இல்லமான பிளேர் ஹவுஸுக்கு பிரதமர் மோடி காரில் சென்றார். உலகின் முக்கிய தலைவர்கள் மட்டுமே பிளேர் ஹவுஸில் தங்க வைக்கப்படுகின்றனர்.
அமெரிக்க நேரப்படி வியாழக்கிழமை பிற்பகல் 4 மணிக்கு (இலங்கை நேரப்படி வெள்ளிக்கிழமை அதிகாலை 2.30 மணி ) ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை பிரதமர் நரேந்திர மோடி சந்தித்துப் பேசினார். இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கி, கட்டியணைத்து ஒருவரை ஒருவர் நலம் விசாரித்து விட்டு, 45 நிமிடங்கள் முக்கிய பேச்சுவார்த்தை நடத்தினர். குறிப்பாக பாதுகாப்பு, வர்த்தகம் தொடர்பாக முக்கிய ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. (a)
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago