2025 ஓகஸ்ட் 14, வியாழக்கிழமை

தென் கொரிய முன்னாள் ஜனாதிபதியின் மனைவியும் கைது

Editorial   / 2025 ஓகஸ்ட் 13 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

தென்கொரியாவின் முன்னாள் தலைமகள் கிம் கியோன் ஹீ (Kim Keon Hee) ஊழல் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

அவருடைய கணவரும் முன்னாள் ஜனாதிபதியுமான யூன் சுக் இயோல் (Yoon Suk Yeol) தடுத்துவைக்கப்பட்ட பிறகு அந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஒரே சமயத்தில் சிறையில் வைக்கப்பட்டுள்ள முதல் ஜனாதிபதி தம்பதி அவர்கள்.

பங்குகளின் மதிப்பை உயர்த்தும் மோசடியில் ஈடுபட்டது, தேர்தல் தலையீடு, லஞ்சம் கொடுத்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் திருவாட்டி கிம் மீது சுமத்தப்பட்டுள்ளன.

தென் கொரியக் கட்டுமான நிறுவனம் வழங்கிய 43,000 டாலர் மதிப்புள்ள பதக்கம் குறித்து அவர் தகவல் தெரிவிக்கவில்லை என்றும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

திரு யூனும, திருவாட்டி கிம்மும் வெவ்வேறு சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .