Editorial / 2018 மே 24 , மு.ப. 04:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
தமிழ்நாட்டின் தூத்துக்குடியில், ஸ்டெர்லைட் ஆலைக்கெதிராகப் போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியமை தொடர்பாக, அரசாங்கம் மீது கடுமையான விமர்சனங்களும் நெருக்குதல்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
இதன்படி, 11 பேர் கொல்லப்பட்டு, 75க்கும் மேற்பட்டோர் காயமடைந்த இச்சம்பவம் தொடர்பாக அறிக்கையொன்றைச் சமர்ப்பிக்குமாறு, தமிழக அரசாங்கத்தை, மத்திய உள்துறை அமைச்சுக் கோரியுள்ளது.
தமிழக அரசாங்கத்துக்குச் சார்பாகச் செயற்படும் மத்திய அரசாங்கம் என, தற்போதைய மத்திய அரசாங்கம் கருதப்படுகின்ற போதிலும், இவ்விடயத்தில் அறிக்கை கோரியமை மூலம், தமிழக அரசாங்கம் மீதான நெருக்குதலை, மத்திய அரசாங்கம் அதிகரித்துள்ளது.
அதேபோல், துப்பாக்கிச் சூடு தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் முறைப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. குறிப்பாக, துப்பாக்கிச் சூடு நடத்த யார் அனுமதி வழங்கியது எனக் கேட்டு, வழக்கறிஞர்கள் குழாமொன்று மனுத் தாக்கல் செய்துள்ளது.
அதேபோல், இவ்விடயம் தொடர்பாக, உயர்நீதிமன்றம் தானே முன்வந்து விசாரணைகளை மேற்கொள்ள வேண்டுமென, இன்னொரு மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அழுத்தங்களுக்கு மத்தியில், இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த, உயர்நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதியரசர் அருணா ஜெகதீசனை, தமிழக அரசாங்கம் நியமித்துள்ளது.
மறுபக்கமாக, துப்பாக்கிச் சூடு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு தமிழக அரசாங்கத்துக்கும் பொலிஸ் பிரதி ஆணையாளருக்கும், தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பிவைத்துள்ளது.
இதேவேளை, தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து, நாளை (25) வெள்ளிக்கிழமை, தமிழகத்தின் அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று, தமிழகத்தின் எதிர்க்கட்சியான திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்துள்ளது.
37 minute ago
58 minute ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
58 minute ago
9 hours ago