Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Freelancer / 2022 ஓகஸ்ட் 22 , பி.ப. 10:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிரியல் பூங்காவில் கூண்டுக்குள் தவறி விழுந்த, 'ஷூ'வை எடுத்து குழந்தையிடம், யானை ஒப்படைத்துள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.
சீனாவின் ஷான்டாங் மாகாணத்தில் உள்ள உயிரியல் பூங்காவுக்கு சமீபத்தில் சென்ற ஒரு குடும்பத்தினருக்கு ஆச்சரியமான சம்பவம் நடந்தது.
அந்த பூங்காவில் உள்ள யானைகளை, சற்று உயரமான மேடையில் இருந்து பார்த்து ரசிக்க முடியும்.அவ்வாறு ரசித்து கொண்டிருந்தபோது, ஒரு சிறுவன் அணிந்திருந்த ஷூ, தவறுதலாக கீழே விழுந்துவிட்டது. ஷூவை இழந்த சிறுவன் அழுதான். அந்தக் கூண்டுக்குள் இருந்த யானை ஒன்று, அதை பார்த்தது.
உடனடியாக அந்த இடத்துக்கு வந்த அந்த யானை, அந்த ஷூவை எடுக்க முயன்றது. மிகவும் சிறிதாக இருந்ததால், மிகவும் சிரமப்பட்டு எடுத்தது. தன் தும்பிக்கையை நீட்டி, உயரமான மேடையில் இருந்த சிறுவனிடம் ஒப்படைத்தது.
சிறுவனும் மகிழ்ச்சியில் அந்த யானைக்கு சிறிது புற்களை கொடுத்தான். இது தொடர்பான 'வீடியோ' சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. அந்த யானையின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளதாக பலரும் பதிவிட்டு உள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .