Editorial / 2019 ஏப்ரல் 11 , மு.ப. 10:25 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிபியத் தலைநகர் திரிபோலிக்கான மோதல்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 47 ஆக நேற்று முன்தினம் உயர்ந்துள்ளது.
சர்வதேச ரீதியாக அங்கிகரிக்கப்பட்ட தேசிய இணக்க அரசாங்கத்துடமிருந்து திரிபோலியைக் கைப்பற்ற கிழக்கு லிபிய தேசிய இராணுவப் படைகள் எதிர்பார்க்கையில், அண்மைய நாட்களில் 47 பேர் கொல்லப்பட்டதாகவும், 181 பேர் காயமடைந்ததாகவும் மருத்துவச் சேவைகள் தெரிவித்ததாக உலக சுகாதார ஸ்தாபனம் கூறியுள்ளது.
கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலோனோர் போராளிகள் என்றபோதும், அதற்குள் இரண்டு வைத்தியர்கள் உள்ளடங்கலாக ஒன்பது பொதுமக்களும் கொல்லப்பட்டதாக உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், மத்திய திரிபோலியில் இதுவரையில் இராணுவ, பாதுகாப்பு வாகனங்களோ அல்லது படைவீரர்களது பிரசன்னமோ வீதிகளில் இல்லாத நிலையில், கடைகள் வழமையான நேரத்துக்கு முன்பதாகவே மாலையில் மூடப்பட்டிருந்தன.
இதேவேளை, தேசிய இணக்க அரசாங்கத்தின் பிரதமர் ஃபயேஸ் அல்-செராஜ்ஜின் படைகள், சக் அல்-காமிஸ் புறநகரிலுள்ள லிபிய தேசிய இராணுவ நிலை மீது நேற்று முன்தினம் வான் தாக்குதலொன்றை நடத்தியதாக அங்குள்ள ஒருவரும், லிபிய தேசிய இராணுவத்தின் தகவல் மூலமொன்றும் தெரிவித்தபோதும் மேலதிக தகவல்கள் எதனையும் வழங்கியிருக்கவில்லை.
இந்நிலையில், தெற்கு திரிபோலியிலுள்ள் ஐன் ஸரா தடுப்பு நிலையத்திலிருந்து 150க்கும் மேற்பட்ட அகதிகளை பாதுகாப்பு வலயமொன்றுக்கு நகர்த்தியுள்ளதாக அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் உயர்ஸ்தானிகர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
38 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
3 hours ago
3 hours ago
4 hours ago